X

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு

ஐ.சி.சி. சார்பில் பெண்களுக்கான 8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஏற்கனவே ஐசிசி வெளியிட்டது.

இந்த தொடரில் இந்திய அணி ‘குரூப் 2’ல் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் உள்ளன. இந்திய அணி பிப். 12-ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் (பிப். 15), இங்கிலாந்து (பிப். 18), அயர்லாந்து (பிப். 20) அணிகளை இந்திய அணி சந்திக்கிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் வருமாறு:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே