மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் – வங்காளதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 57 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மெக் லேனிங் 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆஸ்திரேலிய அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.