Tamilவிளையாட்டு

மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி – இந்திய வீராங்கனைகள் தங்கம் வெல்வார்களா?

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிப் போட்டிக்கு நிகாத் ஜரீன் (50 கிலோ பிரிவு), நீத்து காங்காஸ் (48 கிலோ பிரிவு), லவ்லினா (75 கிலோ பிரிவு), சவீட்டி பூரா (81 கிலோ பிரிவு) ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்று இருந்தார்கள்.

இறுதிப்போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் 4 வீராங்கனைகளும் வென்று, இந்தியாவுக்கு 4 தங்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவீட்டி பூரா மோதும் இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதே போல் நீத்து காங்காஸ் மோதும் இறுதிப் போட்டியும் இன்று நடக்கிறது.

இருவரும் இறுதி ஆட்டத்தில் வென்று தங்கம் பதக்கம் பெறுவார்களா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.