Tamilவிளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மவுன்ட்மாங்கானுவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டு உள்ள ஆஸ்திரேலியாவுக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் ஆல்-ரவுண்டர் 24 வயதான ஆஷ்லி கார்ட்னெர் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளார். இதனால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் ஆஸ்திரேலிய அணியின் முதல் இரு லீக் ஆட்டங்களில் விளையாட முடியாது. மற்ற வீராங்கனைகள் யாருக்கும் பாதிப்பு இல்லை.