X

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்துக்கு 260 ரன்களை இலக்காக நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

 

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளன.

கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் மகளிர் உலக கோப்பை போட்டி நடந்தது. ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 4 தடவையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலக கோப்பையை வென்று உள்ளன.

12-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்கியது.

இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.

ரவுண்ட் ராபின் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இன்றைய தொடக்க ஆட் டத்தில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. இதனால் நியூசிலாந்துக்கு 260 ரன் இலக்காக இருந்தது.

வெஸ்ட்இண்டீஸ் தொடக்க வீராங்கனை ஹேலே மாத்யூஸ் அபாரமாக விளையாடி அவர் 119 ரன் எடுத்தார்.