X

மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி – இன்று முதல் 2வது சுற்று போட்டிகள் தொடங்குகிறது

உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இந்தப்போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. நேற்று முன்தினம் ‘லீக்’ போட்டிகள் முடிவடைந்தன.

இதன் முடிவில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜிரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, மொராக்கோ ஆகிய 16 நாடுகள் நாக்அவுட் சுற்றான 2-வது ரவுண்டுக்கு தகுதி பெற்றன.

நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, அயர்லாந்து, ஜாம்பியா, கோஸ்டாரிகா, சீனா, ஹைத்தி, போர்ச்சுக்கல், வியட்நாம், பிரேசில், பனாமா, இத்தாலி, அர்ஜென்டினா, ஜெர்மனி, தென் கொரியா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. 2-வது சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஸ்பெயின்-சுவிட்சர்லாந்து, ஜப்பான்-நார்வே அணிகள் மோதுகின்றன.