மகளிர் உலகக் கோப்பை கால்பந்து – தென் கொரியாவை வீழ்த்தி கொலம்பியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் தென் கொரியா அணிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கால்பந்து மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. கொலம்பியா முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகள் கோல்கள் அடிக்கவில்லை.

இதனால் கொலம்பியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நார்வே அணி, சுவிட்சர்லாந்துடன் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports