Tamilவிளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் – வங்காளதேசத்துக்கு 141 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

 

மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணு நகரில் இன்று நடைபெறும் 17-ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கி விளையாடியது.

50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக அந்த அணி வீராங்கனை ஷீமைன் காம்பல்லே 53 ரன்கள் அடித்தார்.

மற்றொரு வீராங்கனை ஷார்லின் பிளெட்சர் 17 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒன்றை இலக்க ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.