மகராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும், அரியானாவில் உள்ள 90 தாகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இதுதவிர தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி உள்பட நாடு முழுவதிலும் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சதாரா பாராளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் காலை 9 மணி வரை குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியிருந்தன. அரியானாவில் 8.73 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் 5.46 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது. அதன்பின்னர் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்தது.