மகராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு – 4 பேர் பலி

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதிகனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 25 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நான்குபேர் உயிரிழந்தனர். 21 மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு தேசிய பேரிடம் மீட்புக்குழு படைகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளது. இவர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்று காலை தங்களுக்கு சிறந்த யோசனை கிடைக்கும். 100-க்கும் அதிகமான போலீசார், மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடதிற்கு சென்று தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு உதவி செய்து வருகின்றனர்.

சில தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளனர் என ராய்காட் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆறு நதிகளில் சாவித்ரி, பதல்கனாக ஆகிய இரண்டில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது.

குண்டலிகா, அம்பா நதிகளில் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது. மும்பை, ராய்காட், பல்கார் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மும்பையில் கனமழை காரணமாக தனியார் உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news