மகராஷ்டிராவின் குழப்பமான அரசியல் சூழ்நிலை – ஏக்நாத் ஷிண்டேவுடன் பட்னாவிஸ் ஆலோசனை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றதிலிருந்து அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து வருகிறது.

அஜித் பவாரை அரசில் இணைத்ததால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. சிவசேனாவுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான சித்தாந்தம் முற்றிலும் வேறுபாடு. பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை.

மேலும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு எனக் கருதினர். இதனால் அஜித் பவார் இணைந்து செயல்பட ஷிண்டே முடிவு செய்ததால் அதிருப்தியில் இருந்தனர்.

இதனால் ஏக்நாத் ஷிண்டே கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவியது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. தங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்கள் ராஜினாமா கடிதத்தை பெறுவோம் தவிர, கொடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன் குலே, எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ராஜினாமா செய்யமாட்டார் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மற்றொரு துணைமுதல்வரும், பா.ஜனதா தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்றிரவு ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

சரத் பவார் நேற்று டெல்லியில் செயற்குழு கூட்டத்தை கூட்டி, நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் எனக் கூறினார். அதற்கு அஜித் பவார், தேர்தல் கமிஷனில் சின்னம் மற்றும் கட்சி குறித்து மனு அளித்துள்ளோம். இதனால் சட்டப்பூர்வமாக அந்த கூட்டம் செல்லத்தக்கது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news