X

மகன்களுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் நடிகர் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்

The Gray Man (2022) Dhanush as Avik San. Cr. Paul Abell/Netflix © 2022

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி உள்ளது.

‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சில முக்கிய இடங்களில் ‘தி கிரே மேன்’ திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் ‘தி கிரே மேன்’ படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது. அதற்கு நடிகர் தனுஷ் தனது இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் வந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.