மகனிடம் முடி வெட்டிக்கொண்ட ஷிகர் தவான்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முடி திருத்தும் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடி திருத்தம் செய்வதை பொது முடக்கக் காலத்தில் ஊக்குவித்து வருகின்றனர்.

அண்மையில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தானே வீட்டில் தாடியைத் திருத்தம் செய்துகொண்டதாகப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், தன் மகனிடம் முடிவெட்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தவான், ‘‘நீங்களும் என் மகன் போல உங்கள் வீட்டில் இருக்கும் செல்லக் குழந்தைகளுடன் முடித்திருத்தும் செய்துகொள்ளுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஷிகர் தவான் தனது மகனுடன் டான்ஸ் ஆடி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் லாரா நகைச்சுவை எமோஜி போட்டிருந்தார். அதை ஷிகர் தவானும் லைக் செய்திருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news