X

ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.