X

ப.சிதம்பரம் ஜாமீன் நிபந்தனையை மீறிவிட்டார் – பிரகாஷ் ஜவடேகர்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதில் ஒன்று, வழக்கு தொடர்பாக பேட்டி அளிக்கக்கூடாது என்பதாகும்.

இந்த நிலையில் சிறையில் இருந்து விடுதலையான பிறகு ப.சிதம்பரம் முதல்முறையாக பேட்டி அளித்தார். இது குறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், “ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ள முதல் நாளிலேயே நிபந்தனையை மீறி இருக்கிறார். ஒரு மந்திரியாக அப்பழுக்கின்றி நடந்து கொண்டிருக்கிறேன் என்று அவர் தனக்கு தானே சான்று அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் இப்படி சொன்னது நிபந்தனையை மீறியதாகும்” என கூறினார்.