போதையில் இருந்து இளைய தலைமுறையை காப்பது கல்வியினும் தலையாயது – கவிஞர் வைரமுத்து பதிவு

திரையுலகில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில் இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.

கவிஞர் வைரமுத்து சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது இணைய பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் உயர் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வடுகபட்டி கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் உயர் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி வழங்கினேன் “போதையிலிருந்து இளைய தலைமுறையைக் காப்பதும் மீட்பதுமே கல்வியினும் தலையாயது” என்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools