அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடந்த 2015-ம் ஆண்டு கோகைன் போதைப் பொருள் கடத்தப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மொலிபி என்ற பெண் இதனை கடத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. விமான நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், போதைப் பொருள் பிடிபட்டது.
800 கிராம் மதிப்பிலான 80 கோகைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் தென் ஆப்பிரிக்க பெண்ணான மொலிபிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு போதை பொருட்களை கடத்தி வருவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. போலீசாம் அவ்வப்போது அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வெளிநாட்டு கடத்தல் காரர்களை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்க பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 ஆண்டு சிறை தண்டனை முக்கியத்துவம் வாய்ந்த தாகவே உள்ளது.