Tamilசெய்திகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்குக்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நிலையில், ஜாபர் சாதிக்குக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை மாதத்தின் முதல் தங்கள் கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். செல்போன் எண்ணை அதிகாரிக்கு வழங்கி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.

பாஸ்வோர்ட்டை ஒப்படைக்க வேண்டும். முகவரி மாற்றினால் அதுகுறித்த தகவலை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும், என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.