போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ‘மிருகா’ பட நடிகை

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெண் ஒருவர் ஆண் நண்பருடன் சந்தேகப்படும் படியாக அங்குள்ள அறைக்கு சென்றதை கண்டனர். இதையடுத்து போலீசார் அந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு நடிகை நைய்ரா ஷா என்பவர் சிகரெட்டில் சரஸ் என்ற போதைப்பொருளை புகைத்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் நடிகை நைய்ரா ஷா மற்றும் அவரது காதலரை பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த நடிகையும் அவரது காதலரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். நடிகை நைய்ரா ஷா, மிருகா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools