போட்டி முடிவடையும் தருணத்தில் எனக்கு லேசான நடுக்கம் ஏற்பட்டது – லக்‌ஷயா சென் பேட்டி

புதுடெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீரரான லக்சயா சென் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூவ்வை 24-22, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதன்பின் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

நான் விளையாடி வென்றதிலேயே பெரிய உலக சுற்றுலா போட்டி தொடர் இது. போட்டி முடிவடையும் தருணத்தில் எனக்கு லேசான நடுக்கம் ஏற்பட்டது.  ஏனெனில் இது எனக்கு மிக பெரிய போட்டி.  அதுவும் இறுதி போட்டியில் விளையாடுகிறேன்.  முடிவில் புள்ளிகளை கைப்பற்ற என்னால் முடிந்தது.  ஒரு வெற்றியை போராடி பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இதேபோல்  ஆடவர் இரட்டையர் இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் இந்தோனேசியாவின் முகமது ஹசன் மற்றும் ஹேந்திரா சேத்தியாவன் இணையை  21-16, 26-24 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளது.  இதன் பின்பு சிராக் தெரிவித்திருப்பதாவது:

நாங்கள் இதுவரை விளையாடிய போட்டிகளிலேயே மிக சிறந்த ஒன்று. 2வது செட்டை கைப்பற்றும் போட்டியில் தொடக்கத்தில் நாங்கள் முன்னிலையில் இருந்தோம்.  அதன்பின்பு 20-19 என அவர்கள் முன்னிலை பெற்றனர்.  எனினும், தொடர்ந்து வெற்றி பெறும் வகையில் அமைதியுடன் விளையாடினோம். இவ்வாறு சிராக் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools