போட்டி கிரிக்கெட்டில் ஆக்ரோஷம் ஒரு பகுதி! – கோலிக்கு ஆதரவாக பேசிய அக்தர்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணி கேப்டன் முதல் இன்னிங்சில் சதம் அடித்ததும் தனது சந்தோசத்தை வெளிப்படுத்தும்போது ”எனது பேட் பேசும் என்பதுபோல்” சைக காட்டினார்.

பின்னர் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது, அந்த அணி கேப்டன் டிம் பெய்ன் உடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். இருவரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானம் படுத்தினார்.

டிம் பெய்ன் உடன் விராட் கோலி மோதல் போக்கை மேற்கொண்டதை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். சில வீரர்கள் ஆக்ரோஷம் தேவையானது. அது எல்லையை மீறி விடக்கூடாது என ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிவேக பந்து வீச்சாளரான சோயிப் அக்தரும் விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு ஆதரவாக சோயிப் அக்தர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் “விராட் கோலி தற்போதுள்ள மாடர்ன் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர். போட்டி கிரிக்கெட்டில் ஆக்ரோஷம் ஒரு பகுதி. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது, குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். தயவு செய்து வீராட் கோலியை வசைபாடுவதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools