பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!
‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி – சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய்சேதுபதியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பொன்ராம் இதற்குமுன் சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நான்காவதாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க இருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.