Tamilசினிமா

பொன்னியின் செல்வன் புகைப்படத்தை வெளியிட்டு விக்ரம் போட்ட பதிவு வைரலாகிறது

விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2.

மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் தொடர்சியாக வெளியாகி படத்தின் மீதான மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படத்தில் ஆதித்த கர்காலனாக நடித்த விக்ரம் கதாப்பாத்திரத்தின் உடன்பிறப்புகளான அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி, குந்தவை திரிஷா, மற்றும் வந்தியத்தேவன் கார்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உடன்பிறப்புகள் 3, திரையிலும் திரைக்கு வெளியிலும் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.