Tamilசெய்திகள்

பொது விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரெயில் சேவையின் நேரம் நீட்டிப்பு

மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை முதல் ஞாயிறுதோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.

* அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

* ஏற்கனவே இரவு 9 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.