X

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவை விரட்ட முடியும் – எடப்பாடி பழனிசாமி

தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஐஏஎஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா நோயின் தீவிரம் பற்றி அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றனர். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்.

காய்கறி சந்தைகளில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில்லை. கொரோனா குறித்து காவல்துறையும், உள்ளாட்சித்துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாக தெரிவிக்க வேண்டும்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.