சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* புயல் கரையை கடக்கும்போது மக்கள் வாகனங்களில் செல்லக்கூடாது.
* புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
* புயல் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்; அமைதியாக இருக்க வேண்டும்.
* அனைத்து நிவாரண முகாம்களிலும் மக்களுக்கு தடையின்றி உணவு தரப்படுகிறது.
* நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.