X

பொதுமக்களுக்கு இலவச உணவளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த இடத்திற்கு சென்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி வைத்துள்ளார்.

ஆரம்பகாலக் கட்டத்தில் உருவ கேலிகளை சந்தித்த தனுஷ் அதன்பின் தனது கடுமையான உழைப்பால் மாபெரும் வெற்றிகளை சந்தித்தார். இவருக்கு சமீபத்தில் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. மேலும், நடிகர் தனுஷ் வருகிற 28-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பொதுமக்களுக்கு உணவளித்து வருகின்றனர். அதாவது, சென்னை சாலிக்கிராமத்தில் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடானது தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Tags: tamil cinema