Tamilசெய்திகள்

பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்ய முடிவு

அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈ.பி.எஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இன்றைய வழக்கில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஓ. பன்னீ ர்செல்வம் ஆதரவாளரன துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம். எல் .ஏ . அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிகமானது தான். நாங்கள் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதுவரை பொறுத்திருங்கள். எனவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருத்தமடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.