Tamilசெய்திகள்

பைடனை விட கமலா ஹாரிஸை தோற்கடிப்பது சுலபம் – டொனால்ட் டிரம்ப் பேச்சு

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், சமீபத்தில் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தற்போது அதிபராக களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை எளிதில் வீழ்த்திவிட முடியும் என்று எதிர்தரப்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய டிரம்ப், “அவரைவிட கமலா அதிக தீவிரமானவர். இதனால், பைடனை விட கமலா எளிதானவராக இருப்பார் என நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.