பைக் ரேசை தொடர்ந்து துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அஜித்

வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். ‘ஏகே 61’ எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் கார் மூலம் திருச்சி சென்றுள்ளார் . இன்று காலை ரைபிள் கிளப்புக்குச் சென்ற இவர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். மேலும், 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளிலும் இவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித் ரைபிள் கிளப்புக்கு சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools