Tamilசெய்திகள்

பேஸ்புக் தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக இந்தியர் நியமனம்!

பேஸ்புக்’ நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து அதிகாரியாக உள்ளவர் கரன்தீப் ஆனந்த் இந்தியர். இவர் 15 ஆண்டுகள் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் சேர்ந்தவர் ஆவார். இவர் ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் மார்க்கெட் பிளேஸ், ஆடியன்ஸ் நெட்வொர்க், ஆட் சொல்யூசன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியவர்.

இந்த நிலையில் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் ‘வொர்க் பிளேஸ்’ என்னும் நிறுவன தகவல்தொடர்பு பிரிவின் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சாப்ட்வேர் என்னும் மென்பொருள் தயாரிப்பாளர்கள், என்ஜினீயர்கள், ஆராய்ச்சியாளர்கள், தரவு (டேட்டா) என்ஜினீயர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமை வகிப்பார். ‘வொர்க் பிளேஸ்’ தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு கரன் தீப் ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “உலகமெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு வொர்க்பிளேஸ்சை கொண்டு செல்வதில் நான் ஒரு அங்கமாக இருக்கப்போகிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறி உள்ளார்.

கரன்தீப் ஆனந்த் வொர்க்பிளேஸ் பிரிவில் தலைமை ஏற்பது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “கரன்தீப் வொர்க்பிளேஸ் தலைமை பதவிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அவர் நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் பின்னணியில் மிகுந்த அனுபவம் பெற்றிருப்பவர். அவர் எங்களுடன் சேர்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *