பேராசிரியன் அன்பழகனின் பிறந்தநாள் – வைரலாகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிவு

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

“யாரோ சிறியர் நரியர்

சூதோ வாதோ செய்திடத் துணிவரேல் பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்!

தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்!

பெரியாரின் பிள்ளைகள் நாம்

பேரறிஞர் தம்பிகள் நாம் – என்றும்

பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!”

என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியரின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news