பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனிக்க தனக்கு ஒரு மாதம் ‘பரோல்’ வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தார்.
இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க புழல் மத்திய சிறை சூப்பிரண்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். எனவே அவர் இன்று (வெள்ளிக்கிழமை) சிறையில் இருந்து ‘பரோலில்’ வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.