பேப்பர் லீக்ஸ் ஊழலின் தந்தை காங்கிரஸ் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாக்கு
நீட் பேப்பர் லீக்ஸ் தொடர்பாக மத்திய அரசு மீதும், தேசிய தேர்வு முகமை மீதும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. நீட் தேர்வு நடத்தி வரும் அமைப்பு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் பேப்பர் லீக்ஸ் தொடர்பாக அமளியில் ஈடுபட்டது. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் நீட் தேர்வை மீண்டும் நடத்த தேவையில்லை. தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
“பேப்பர் லீக்ஸ், ஊழலின் தந்தை காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி அரசை நம்பவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தையும் அது நம்பவில்லை. நீட் மீதான உச்சநீதிமன்றத்தின் முடிவு மாணவர்கள் மீதான தோல்வி கிடையாது. காங்கிரசின் முறையற்ற அணுகுமுறை, அற்ப அரசியலின் முடிவு” என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிஸ்டமேட்டிக் மீறல் அல்லது தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. இரண்டு இடங்களில் கேள்வித்தால் லீக் ஆகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து தேர்வு நடத்தப்படும் மையத்திற்கு பல கிலோ மீட்டர் கடந்து வர வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் நீட் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.