‘பேட்ட’ படம் எனக்கு சினிமாவில் மறு வாழ்வு கொடுத்திருக்கிறாது – சிம்ரன்

ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சிம்ரனின் இளமையான தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதை தொடர்ந்து அவர் ரொம்பவே உற்சாகமடைந்துள்ளார்.

பேட்ட படத்தை தொடர்ந்து இனி தொடர்ந்து நடிப்பதோடு, கதை தேர்வில் கவனம் செலுத்தவும் முடிவு செய்திருக்கும் சிம்ரன் பேட்ட படம் குறித்து கூறுகையில், “கடுமையான உணவு பழக்கம், உடற்பயிற்சி, யோகா மூலம் என்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளேன். ஒருவேளை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் பெறுவதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பேட்ட படம் என்னுடைய பாதையை மீட்டு கொடுத்துள்ளது. என்னுடைய சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து இருந்தேன். இந்த படத்துக்கு பின்னர் நான் நடிக்கும் படங்களை பொறுப்புடன் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி உள்ளது.” என்று தெரிவித்திருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools