Tamilசெய்திகள்

பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் – விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்பிக்கை

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தை ஒட்டி டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய மந்திரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இன்று மாலை பேச்சுவார்த்தை துவங்க உள்ள நிலையில் பஞ்சாப் விவசாய சங்கத்தின் பொது செயலாளர் சர்வான் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இன்றைய பேச்சுவார்த்தையில் முழுக்க முழுக்க நேர்மறையான மனநிலையில் பங்கேற்க இருக்கிறோம். இந்த சந்திப்பின் மூலம் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.