X

பெற்றோர் சம்மதித்தால் தான் காதலரை கரம் பிடிப்பேன் – டாப்ஸி

சமீபகால கதாநாயகிகளில் கவர்ச்சியையும், நடிப்பு திறனையும் சேர்த்து வழங்குபவர், டாப்சி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களின் ரசனை அறிந்து படங்களில் நடித்து வருவதாக டாப்சி கூறுகிறார். இவருக்கும், பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இரண்டு பேரின் காதலுக்கும் பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியிருக்கிறது.

இதுபற்றி டாப்சியிடம் கேட்டபோது: “எனக்கும், பேட்மிண்டன் வீரர் மத்யாசுக்கும் காதல் இருந்து வருவது உண்மைதான். என் குடும்பத்தினர் அனைவரும் சம்மதித்தால்தான், காதலரை மணப்பேன். ஒருவேளை பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காவிட்டால், எங்கள் திருமணம் ரத்தாகி இருக்கும். திருமணத்துக்குப்பின், இருவருமே அவரவர் வேலைகளை செய்வது என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்த முடிவில் இரண்டு பேரும் உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் டாப்சி.