பெர்த் க்ரீன் பிட்ச் ஆஸ்திரேலியாவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் – மைக்கேல் வாகன்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதனால் நாளை தொடங்கும் 2-வது டெஸ்டில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலியா ‘க்ரீன் பிட்ச்’ தயார் செய்துள்ளது.

இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்காக ஆஸ்திரேலியா ‘க்ரீன் பிட்ச்’ தயார் செய்திருப்பது, அவர்களுக்கு எதிராகவே அமையும் என மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் இதுகுறித்து கூறுகையில் ‘‘இங்கிலாந்து மற்றும் அடிலெய்டு டெஸ்டில் அசத்திய பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் உறுதியாக இன்று இரவு சந்தோசத்துடன் தூங்கச் செல்வார்கள்.

ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களை விட அவர்கள் (பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா) சிறப்பாக பந்து வீசுகிறார்கள். அவர்களுடைய பந்து வீச்சு மிகவம் அபாரமாக உள்ளது. ‘க்ரீன் பிட்ச்’ மூலம் ஆஸ்திரேலியா மிகப்பெரிய சவாலை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா இந்திய பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அடிலெய்டு டெஸ்ட் போட்டியை பார்த்த வகையில் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் இல்லை. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் போட்டி முழுவதும் நேர்த்தியாக பந்து வீசினார்கள்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools