பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் பலி

பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.

தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர்.  விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக நாஸ்கா காவல்துறை தலைவர் கமாண்டர் எட்கர் எஸ்பினோசா தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools