பெண் கெட்டப்பில் நடிகர் கவின் – வைரலாகும் ‘ஸ்டார்’ படத்தின் பாடல்
டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடலான விண்டேஜ் லவ் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அடுத்த பாடலான ‘மெலடி’ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த பாடலில் கவின் பெண் வேடத்தில் குத்தாட்டம் ஆடிருக்கிறார். காலேஜ் கல்சுரல்ஸ் நிகழ்ச்சியில் ஆடுவதுப் போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பாடல் மிகவும் எனர்ஜெட்டிக்காகவும் பெப்பியாக அமைந்துள்ளது.
படத்தின் மற்ற பாடல்களைப் போலவே இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.