பெண்கள் முன்பு நிர்வாணமாக நடனம் ஆடிய மலையாள நடிகர் ஸ்ரீஜித் கைது

கேரளாவில் பல மலையாள படங்களில் நடித்தவர் ஸ்ரீஜித் ரவி. திருச்சூரை சேர்ந்த இவர் ஓய்வு நேரங்களில் அய்யன்தோல் பகுதியில் உள்ள பொது பூங்காவுக்கு செல்வது வழக்கம். இந்த பூங்காவுக்கு மாலை நேரங்களில் ஏராளமான பெண்கள், சிறுமிகள் பலர் வருவார்கள். நடிகர் என்பதால் பூங்காவுக்கு வருவோர் ஸ்ரீஜித் ரவியிடம் சென்று பேசுவார்கள். மேலும் அவரோடு செல்பியும் எடுத்து கொள்வார்கள்.

பூங்காவில் தன்னோடு பேசும் பெண்களில் இளம் வயதுடையோரிடம் நடிகர் ஸ்ரீஜித் ரவி அத்துமீறுவதாக அடிக்கடி புகார்கள் வந்தது. ஆனால் அவர் இதனை மறுத்து வந்தார். மேலும் இந்த புகார்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் போலீசாரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூங்காவில் சில இளம் பெண்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் ஸ்ரீஜித் ரவி, அந்த பெண்களிடம் வலிய சென்று பேசியுள்ளார். அவரை அந்த பெண்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து நடிகர் ஸ்ரீஜித் ரவி திடீரென தனது உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றபடி, நடனமாட தொடங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி அந்த பெண்களில் இருவர் திருச்சூர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் நடிகர் ஸ்ரீஜித் ரவி மீது இதற்கு முன்பும் இதுபோன்ற புகார்கள் வந்ததால் அவர்கள் சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டனர். அதோடு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர். இதில் நடிகர் ஸ்ரீஜித் ரவி, பூங்காவுக்கு வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் நடிகர் ஸ்ரீஜித் ரவியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். அவர் மீதான புகாருக்கு தேவையான ஆவணங்களையும், சாட்சியங்களையும் தயார் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நடிகர் ஸ்ரீஜித் ரவி பெண்கள் முன்பு நிர்வாண நடனமாடி கைதான சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools