பெண்கள் மட்டும் இடம்பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ என்ற கட்சி நேற்று டெல்லியில் தொடங்கப்பட்டது. 36 வயதான பெண் டாக்டரும், சமூக ஆர்வலருமான ஸ்வேதா ஷெட்டி, இக்கட்சியை தொடங்கி உள்ளார். கட்சி தலைவராக அவர் செயல்படுவார்.
இதுபற்றி ஸ்வேதா ஷெட்டி கூறுகையில், “அமெரிக்காவில் ஒரு பெண்கள் கட்சி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதை பின்பற்றி இக்கட்சியை தொடங்கி உள்ளோம். மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதும், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு பெற்றுத்தருவதும் கட்சியின் நோக்கம் ஆகும்” என்றார்.