பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் – உ.பி வாரியர்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி
பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மூனி 52 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வோல்வார்த் 30 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். உ.பி. வாரியர்ஸ் அணியின் எக்லேஸ்டோன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 4 ரன்னிலும், கிரண் நவ்கிர், சமரி அட்டப்பட்டு ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த தீப்தி சர்மா ஒருபுறம் நிற்க அதன்பின் வந்த கிரேஷ் ஹாரிஸ் 1 ரன்னிலும், ஷ்வேதா ஷெராவத் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்த உ.பி. வாரியர்ஸ் 35 ரன்கள் எடுப்பதற்குள் 5 விககெட்டுகளை இழந்தது.
6-வது விக்கெட்டுக்கு தீப்தி சர்மா உடன் பூனம் கெமர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தீப்தி சர்மா 60 பந்தில் 88 ரன்களும், பூனம் கெமர் 36 பந்தில் 36 ரன்களும் ஆட்டம் இழக்காமல் எடுத்த போதிலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
அந்த அணிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி, உ.பி. வார்யர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆர்சிபி இன்று மும்பையை எதிர்கொள்கிறது. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். நாளை டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் குஜராத் அணி வெற்றி பெற்று, ஆர்சி இன்று தோல்வியடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணிகள் முன்னேறும்.
இன்று ஆர்சிபி வெற்றி பெற்று, நாளை குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றால் உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ ஆகிய இரண்டு அணிகள் ஒன்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். குஜராத் ஜெயன்ட்ஸ் அணி தோல்வியடைந்தால் ஆர்சிபி மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.