பெண்கள் ஜூனியர் ஹாக்கி போட்டி – இந்தியா, கொரியா இடையிலான போட்டி டிராவானது

8வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியாவுடன், தென்கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான், சீனத்தைபே ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, கஜகஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கோல் கணக்கிலும், மலேசியாவை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. இந்த ஆட்டத்தில் 2-0 என தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி கடைசி நிமிட கோல்களினால் 2 கோல்களை அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.

இந்திய அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தனது அடுத்த ஆட்டத்தில் சீன தைபே அணியை இந்திய அணி வரும் 8-ம் தேதி சந்திக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools