X

பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி – வியட்நாம் அணியை 7-0 கணக்கில் வீழ்த்தியது நெதர்லாந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பி மற்றும் சி பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா, நைஜிரியா மற்றும் சி பிரிவில் ஜப்பான், ஸ்பெயின் ஆகிய அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வியட்நாம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கோல் போட ஆரம்பித்த நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து கோல்களை பதிவு செய்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 7 கோல்களை பதிவு செய்தது.

கடைசி வரை போராடிய வியட்நாம் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தோல்வியடைந்தது. இந்த பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டியில் 0-0 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது. இதன் மூலம் இ பிரிவில் வியட்நாம் மற்றும் போர்ச்சுகல் அணி வெளியேறியது. நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Tags: tamil sports