X

பெண்கள் உலக குத்துசண்டை போட்டி – வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமத் ரக்சத்துடன் மோதினார்.

54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜமுனா போரோ, ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சீன தைபேயின் ஹூயாங் ஹியோ வென்னை சந்தித்தார்.

இதில் 5-0 என்ற கணக்கில் சீன தைபே வீராங்கனை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து, ஜமுனா போரா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதேபோல், மற்றொரு அரையிறுதியில் 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், சீனாவின் யாங் லியை எதிர்கொண்டார்.

இதில் 3-2 என்ற கணக்கில் சீன வீராங்கனை வென்று இறுதிக்கு முன்னேறினார். இதனால் லாவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார்.

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 பேர் அரையிறுதியில் போட்டியிட்டனர். இதில் மஞ்சு ராணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மேரி கோம், ஜமுனா போரா, லாவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

Tags: sports news