பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து – நார்வே, சுவிட்சர்லாந்து அணிகள் நாக் அவுட் போட்டிக்கு முன்னேற்றம்

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ் அணிகள் இடம்பிடித்திருந்தன. நான்கு அணிகளிலும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின. அதன்முடிவில், நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. சுவிட்சர்லாந்து 2 போட்டிகளில் டிரா செய்திருந்ததால் 5 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

நார்வே, நியூசிலாந்து அணிகள் தலா ஒரு டிராவுடன், தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால் நார்வே 6 கோல்கள் அடித்திருந்தது. 1 கோல் விட்டுக்கொடுத்திருந்தது. நியூசிலாந்து ஒரு கோல் அடித்து ஒரு கோல் விட்டுக்கொடுத்திருந்தது. இதனால் கோல்கள் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குத்தள்ளி நர்வே 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேளியுள்ளது.

‘பி’ குரூப்பில் நைஜீரியா, கனடா, ஆஸ்திரேலியா இடையெ கடும் போட்டி நிலவுகிறது. ‘சி’ பிரிவில் ஸ்பெயின், ஜப்பான் அணிகள் ஏறக்குறைய நாக்அவுட் சுற்றை உறுதி செய்துவிட்டன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports