Tamilவிளையாட்டு

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து – இன்று இத்தாலி – அர்ஜெண்டினா, ஜெர்மனி – மொரோக்கோ அணிகள் மோதல்

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சுவீடன் 2-1 எனவும், போர்ச்சுக்கல் அணிக்கு எதிராக நெதர்லாந்து 1-0 எனவும் வெற்றி பெற்றன. பிரான்ஸ்- ஜமைக்கா இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இத்தாலி- அர்ஜென்டினா அணிகளும், மதியம் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெர்மனி மொரோக்கோ அணிகளும், மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் பனமா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.