பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து – 2020 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் தொடங்குகிறது

17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிபா பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த பெரும்பாலான நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது. உலகக்கோப்பை போட்டியை எப்போது நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக்க பிபாவின் ஏற்பாடு குழு ஆலோசனை நடத்தியது. சுரிச் நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், எந்தெந்த இடத்தில் போட்டிகளில் நடைபெறும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. கொல்கத்தா, புவனேஸ்வர், அகமதாபாத், கோவா, நவி மும்பை ஆகிய இடங்களை பிபா அணி பார்வையிட்டுள்ளது என்று தொடருக்கான இயக்குனர் ரோமா கன்னா தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news