பெண்கள் ஆக்கி – மலேசியாவுடனான கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி

இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்றது. இதில் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 35-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் அடித்தார். தோல்வியே சந்திக்காத இந்திய அணி இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது ஆட்டம் மட்டும் டிராவில் முடிந்தது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணி பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் கூறுகையில், ‘நமது வீராங்கனைகள் பல முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் நுழைந்தனர். போதுமான ஷாட்டுகளை அடித்ததோடு, பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் உருவாக்கினர். ஆனால் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news